அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
34.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

STEM Education in Tamil | ஸ்டெம் கல்வி என்றால் என்ன

STEM Education in Tamil | ஸ்டெம் கல்வி என்றால் என்ன

STEM Education in Tamil

ஸ்டெம் கல்வி

மனித சமுதாயத்தின் வளர்ச்சி பாதையில் இடைவிடாத முயற்சியும் தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த மகத்தான கண்டுபிடிப்புகள் சிக்கிமுக்கி கல்லும், கூர்மையான கல்லும் தான். அங்கிருந்துதான் மனித நாகரிகத்தின் பயணம் தொடங்கியது. இன்று வானளாவிய கட்டங்களும், விண்ணை அளக்கும் விண்கலங்களும், விதவிமான உணவு பண்டங்களும் உலகேயே அழிக்கவல்ல போர். ஆயுதங்களும் படைத்தவனாக மனிதன் மாறி இருக்கிறான்.

இந்த மாற்றம் உடனடியாக ஏற்படவில்லை. மனிதன் அடுத்த மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக எண்களையும், மொழிகளையும் கூறலாம். அடுத்த சில ஆயிரம் ஆண்டுகளில் மனிதனால் வட்டமும், பூஜ்யமும், சக்கரமும் கண்டறியப்பட்டன. இவைதான் இத்தனை காலமாக, முந்தைய உலகிலிருந்து தற்போது உலகு வரை நம்மை வழிநடத்தி வருகின்றன. கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, சமயம், சமூக அமைப்பு, சட்டங்கள், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்கள், பொருளதாரம் என மனிதனின் அறிவு பல துறைகளிலும் விழுதுவிட்டு இன்று மாபெரும் மரமாகி நிற்கிறது. சென்ற இரு நூற்றாண்டுகள் தொழிற்புரட்சியும் தேசிய இனங்களும் மக்களாட்சி அரசியலும் வலுப்பெற்ற காலம். நாம் இன்று பெற்று அனைத்துவிதமான நவீன வசதி வாய்ப்புகளும் சிற்பமாக செதுக்கப்பட்ட காலம் அது.

Read Also: எப்படி கல்லூரி படிப்பை தேர்வு செய்வது

இன்றைய இயந்திரமயமான உலகம், மேலும் முன்னேற்றத்தை நோக்கி விரைகிறது. அதற்கேற்ப நமது அறிவை வளப்படுத்தும் கல்வி முறையிலும் மாற்றத்தின் தேவை உணரப்படுகிறது. இந்த நூற்றாண்டு மாபெரும் அறிவியல், தொழில்நுட்பங்களின் காலமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கேற்படி மாணவ சமுதாயம் வடிவமைக்கப்படுவது அவசியம் என்ற சிந்தையின் விளைவுதான், ஸ்டெம் கல்விமுறை.

ஸ்டெம் கல்வி உருவானது எங்கு

1990க்களில் அமெரிக்காவில் கல்வியாளர்கள், அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட வருங்காலத்துக்கான கல்விமுறை என்ற கருத்துரு, தேசிய அறிவியல் நிறுவனத்தில் (என்எல்எப்) விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னற்றேத்தை தக்க வைக்கவும், விரைவுப்படுத்தவும் அறிவியல், கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் அளிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்களால் பரிந்துரைக்கப்பட்டது. அது சுருக்கமாக ஸ்மெட் (அறிவியல், கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் முதல் எழுத்துகளின் சேர்க்கை) எனப்பட்டது. பிறகு இந்த கருத்துரு ஸ்டெம் (Science, Technology, Engineering and Mathematics –STEM) என 2001ல் மாற்றம் பெற்றது.

2011இல் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, இதனை அந்தநாட்டின் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தினார். போட்டி நாடுகளை வெல்லும் வகையில் புதியன கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவது, தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அறிவை மேம்படுத்துவது ஆகியவற்றை ஸ்டெம் கல்வி இலக்காகக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் நிறுவன மதிப்பீட்டின்படி 2012 முதல் 2022ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் 90 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஸ்டெம் கல்வி முறையால் அடையப்படும் என்று எதிர்பாாக்கப்பட்டது. புதிய ஸ்டெம் பணியாளர்களின் ஊதியம் நல்ல உயர்வை கண்டிக்கிறது.

உலக நாடுகளில் பரவிய ஸ்டெம்

உலக வல்லரசான அமொிக்காவில் தோன்றிய இந்த கல்விச்சிந்தனை வெகு விரைவில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. அமெரிக்காவில் மழலையர் பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கே-8 என்று அழைக்கப்படுகிறது. அந்த வகுப்புகளில் பயிலும்போதே மாணவர்களிடையே ஸ்டெம் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதையொட்டியே பிற நாடுகளிலும் ஸ்டெம் கல்வி முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

ஸ்டெம் கல்வி என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துைறகளில் பட்டபடிப்புகளை மட்டும் படிப்பது அல்ல. அதையும் தாண்டி மாணவர்கள் இடையே இத்துறைகளின் முக்கியத்துவத்தை இளம் வயதிலேயே பதியச் செய்வதும், உயா் கல்வியில் இந்த நான்கு துறைகளிடையே இணக்கமான கல்வியை உறுதிப்படுத்துவதும் முக்கிய கருதுகோளாகும். இந்தியாவில் 2006ம் ஆண்டு முதஸ் ஸ்டெம் கல்வியை விரிவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திறன் மிகுந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையும், அறிவியல், கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிலவும் கல்வி போதாமையும் புதிய ஸ்டெம் முன்னெடுப்புகளால் மாறி வருகின்றன. இந்திய அரசு 2020இல் அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கையில் ஸ்டெம் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு ஸ்டெம் கல்விக்காக வானவில் மன்றம் போன்ற தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஸ்டெம் ஏன் தேவை?

இதுவரையிலான உலக முன்னேற்றங்களை எல்லாம் விஞ்சும் வகையில் இந்த நூற்றாண்டு இருக்கும் என்பதே அனைவரும் அறிந்ததே. இந்த வேகத்திற்கு தகுந்தாற்போல நம்மை நாம் தகவமைத்து கொள்ளாவிடில் பின்தங்கிவிடுவோம். எனவே 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற அதிநவீன மனங்களை, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் திறமை மிகுந்த மனிதர்களை ஒவ்வொரு நாடும் உருவாக்குவது அவசியம். இந்த நூற்றாண்டுக்கு தேவையான திறன்களான வல்லுநர்களின் குறிப்பிடுபவை படைப்பாற்றல், புதியன கண்டறியும் திறன், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், விமர்சன சிந்தனை, வடிவமைப்பாற்றால், நெறிமுறை சார்ந்த தலைமை பண்பு, சமூக இணைவு ஆகியவை. வழக்கமான பட்டப்படிப்புகளை விட ஸ்டெம் பிரிவில் உள்ள பட்டப்படிப்புகளில் இவை கூடுதலாக கிடைக்கின்றன என்பதே வல்லுநர்களின் ஆய்வு முடிவுகளாகும்.

உலக அளவில் இந்திய அறிவு ஏற்றுமதியை தொடங்கி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்று உலகின் பெருநிறுவனங்கள் பலவற்றில் இந்தியர்களின் தலைமை சிறப்பு வெளிப்பட்டு இருக்கிறது. ஆயினும் நமது ஒட்டுமொத்த பட்டதாரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவே உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புள்ளிவிவரப்படி 2016-2017ல் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் 1.07 கோடி பட்டதாரிகள் எண்ணிக்கையில் 36 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை சரிபாதியாக உயரும்போது உலகிற்கு இந்திய அளிக்கும் தேர்ந்த தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

மக்கள் உயர தேசம் உயரும்

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப பட்டதாாிகளின் பங்களிப்பு மிகவும் அதிகம். நாட்டிற்கு அதிக அளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்தவர்கள் இந்த பட்டதாரிகள்தான். அதுமட்டுமின்றி, உலக அளவில் இந்தியாவின் சிறப்பை வெளிப்படுத்தும் இளம் தூதவர்களாகவும் அவர்கள் விளங்குகிறார்கள்.

தற்போது இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களில் 2.80 லட்சம் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஸ்டெம் கல்வியால் இத்துறையில் புதிய பட்டதாரிகள் வரும்போது, இந்தியாவில் ஆராய்ச்சித்துறை மேலும் வலுப்பெறும். பாலின சமத்துவத்தை உருவாக்குவதிலும் ஸ்டெம் கல்வி முக்கியத்துவம் வகிக்கிறது. ஒரு புள்ளிவிவரப்படி, ஸ்டெம் பாடப்பிரிவு பட்டதாரிகளில் 43 சதவீதம் பேர் பெண்கள். இது உலகிலேயே அதிக அளவாகும். தகவல் தொழில்நுட்ப உலகில் இந்திய பெண்களின் சாதனைகள் பலராலும் பாராட்டப்படுகின்றன. இது ஆர்ப்பாட்டமின்றி மகளிரின் சமூக நிலையை உயர்த்தி இருக்கிறது.

ஸ்டெம் கல்வி என்பது இந்த நான்கு பாடப்பிரிவுகளில் பயில்வதுடன் நின்று விடுவதல்ல. நடைமுறையில் உள்ள நமது கல்வியில் அறிவியல் பார்வையை அதிகரிப்பதன் வாயிலாக, பிற துைறகளிலும் மாற்றங்கள் நிகழும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஸ்டெம் கல்வி சிறப்பு

முதல் வகுப்பிலிருந்தே மாணவர்கள் இடையே அறிவியல் புத்தாக்க சிந்தனையை விதைப்பது ஸ்டெம் கல்வியின் அடிப்படையாகும். உயர்நிலை பள்ளிக்கு (ஓன்பதாம் வகுப்பு) செல்லும் மாணவன் தனது எதிர்கால படிப்பை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் இருப்பான். அவனுக்கு முந்தையை ஆண்டுகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஸ்டெம் விழிப்புணர்வுக் கல்வி காரணமாக, தனது துறையை தேர்வு செய்வதிலும், உயர்நிலை பள்ளி கல்வியிலும் கூடுதல் ஆர்வம் காட்ட முடியும். எதையும் நீயே செய்து பார், எதையும் பரிசோதித்து நீயே அறிந்துகொள் என்பது ஸ்டெம் கல்வியின் மூலம். அதற்கேற்ப பள்ளிகளில் அறிவியல், கணிதம் பாடங்களுக்கு மிகுந்த கவனம் அளிக்கப்படும். மனன வழிக் கல்வியிலிருந்து அனுபவப்பூர்வமான கல்வியாக பள்ளி கல்வி மாறும்போது, மாணவர்களின் இடைநிற்றல் குறையும், அவர்களின் தரமும் உயரும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

இதற்காக முதலில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் தரத்தை உயர்த்தவும், கல்வி கற்பித்தலில் புதிய மாற்றங்களை நிகழ்த்தவும் திட்டமிடப்படுகிறது. இதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இணையவழி கல்வி, கற்றலில் தொழில்நுட்ப சாதனங்களின் உதவி, ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் பயிற்றுவித்தல், சுயபரிசோதனை வாய்ப்புகள் ஆகியவையும் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும்.

சிக்கல், சவால்கள்

இத்தனை சிறப்புகள் இருந்தாலும், ஸ்டெம் கல்வியை விரிவுப்படுத்துவதில் சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு ஆகும் கூடுதல் செலவை எதிர்கொள்ளும் நிலையில் நமது அரசுகள் உள்ளனவா, பள்ளி கல்விக்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இருக்குமா என்பவை கவலைக்குரிய கேள்விகள். நகர்ப்புற பள்ளிகளுக்கும் கிராமப்புற பள்ளிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு காணப்படுகிறது. தவிர அரசுப்பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே உள்கட்டமைப்பு, கல்விச்சாதன வசதிகளில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு காணப்படுகிறது. இப்பள்ளிகள் அனைத்திலும் ஸ்டெம் கல்வியை சீராக அறிமுகம் செய்து சிரமமானதே.

ஆசிரியர்களை புதிய முறைகளுக்கு ஏற்ற மாற்றியமைப்பதிலும் கடும் சிரமங்கள் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களுக்குப் பழக்கமாவதிலும், புதிய கற்பித்தல் முறைகளுக்கு தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதிலும் ஆசிரியர்களுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது என்பது பொதுவான கருத்தாக உள்ளது. அதேபோல் நமது உயர்கல்வி நிறுவனங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும். குறிப்பாக பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் பாடப் பிரிவுகளுக்கேற்ற திறமையான ஆசிரியர்கள், பரிசோதனை கூடங்கள், அறிவியல் சிந்தனை இல்லை என்பது வருத்தம் அளிப்பதாகும். வெறும் பிரம்மாண்டமான கட்டங்களும், விடுதிகளும் மட்டுமே கல்லூரியாகிவிடாது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

பள்ளி கல்வியில் விதைக்கப்பட்ட ஸ்டெம் விழிப்புணர்வுடன் உயர்கல்விக்கு வரும் மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக, நமது கல்லூரிகள் இருந்துவிடக்கூடாது. இந்தநிலையை மாற்ற கல்லூரிகளை கண்காணித்து தரப்படுத்தும் அரசு அமைப்புகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

மாற்றம் நிகழட்டும்

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகளை ஆண்டுதோறும் உருவாக்கும் நாடு இந்தியா. நமது நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அளவுக்கு எந்த நாட்டிலும் இல்லை. 1,113 பல்கலைக்கழகங்களும், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள 43,796 கல்லூரிகளும் இங்கு உள்ளன. தவிர தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், ஆசிரியர் பயிற்சி வாரியம் போன்ற அமைப்புகளால் நடத்தப்படும் பாலிடெக்னிக், ஐடிஐ, நர்சிங் கல்வி நிறுவனம் போன்ற தனித்தியங்கும் 11,296 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இது 2020ஆம் ஆண்டு புள்ளி விவரம்.

2020-2021 கல்வியாண்டில் கல்லூரிப் படிப்பை முடித்து இளநிலை பட்டதாரிகளாக வந்த இந்தியர்களின் எண்ணிக்கை 69.10 லட்சம். இதில் பெண்களிக் எண்ணிக்கை மட்டுமே 35.60 லட்சம். இவை தவிர முதுநிலை கல்வி, ஆய்வு படிப்புகளில், தொழிற்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை தனி. இந்த அளவுக்கு மாபெரும் எண்ணிக்கையில் பட்டதாரிகள் இருந்தாலும் இவர்களில் பெரும்பாலோர் சாதிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். போட்டி மிகுந்த வேலை வாய்ப்பு சந்தையில் இவர்களில் பலரால் நுழையவே முடிவதில்லை. புதிய தொழில் முனைவுக்கான ஊக்கமும் பலரிடம் இல்லை என்பது சமூகவியலாளர்களின் கருத்து.

இந்தநிலையை மாற்ற ஸ்டெம் கல்விமுறை உதவும் என்று கல்வியாளர்கள் நம்புகின்றனர். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உலக நியதியை ஒட்டி, இந்த புதிய மாற்றத்துக்கு நமது பள்ளிகளும், உயர்கல்வி நிறுவனங்களும் மாற வேண்டும். அப்போது உலகிற்கு நமது நாட்டிற்கும் தேவையான திறமையான வல்லுநர்களின் உற்பத்தி கேந்திரங்களாக அவை மாறும்.

தேசிய கல்வி கொள்கையில் ஸ்டெம்

இந்திய அரசு 2020ல் அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. இதில் ஸ்டெம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் சில அம்சங்கள்

மதிப்பெண்களை மட்டும் கருத்தில்கொள்ளும் மனப்பாட கல்விக்கு மாற்றாக, சுயபரிசோதனையுடன் கூடிய கல்வி வலியுறுத்தப்படுகிறது. பயன்பாட்டு கல்வி, பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், எதையும் கேள்விக்கு உட்படுத்துவது, விவாதங்களில் பங்களிப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு பயிற்சி ஆகியவை இளம் வயதிலேயே அறிமுகம் செய்யப்படும். கணக்கீட்டு திறன், இயந்திரவழிக் கற்றல், தர அறிவியல் தொடர்பான அறிமுகப் பாடங்கள் முதல் வகுப்பிலேயே தொடங்கப்படும். கணினிக்கான கட்டளை நிரல்களை எழுதும் பயிற்சி மாணவர்களின் 11வது வயதிலேயே அறிமுகம் செய்யப்படும்.

பள்ளிகல்வி 5 + 3+ 3+ 4 என நான்கு நிலைகளாக பிரிக்கப்படும். அடித்தளம் (2ஆம் வகுப்பு வரை), ஆயத்தம் (5ஆம் வகுப்பு வரை), நடுநிலை (எட்டாம் வகுப்பு வரை), மேல்நிலை (12ஆம் வகுப்பு வரை) என வகுப்புகள் பிரிக்கப்பட்டு அந்தந்த நிலைக்கு ஏற்ப கூடுதல் கவனம் அளிக்கப்படும். இளநிலை கல்வியின் இதுவரை இல்லாத புதிய பாடப்பிரிவுகளும் புதிய பாடத்திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த படிப்புகளுக்கு அதிக கவனம் அளிக்கப்படும்.

இரட்டை பட்டப்படிப்புக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இரு வேறு துறைகளிலோ, ஒரே துறையின் இருவேறு பிரிவுகளிலோ மாணவர்கள் பயில்வது ஊக்குவிக்கப்படும். மாலை நேர கல்லூரி, தொலைநிலை கல்வி, இணையவழி கல்வி ஆகியவை மாணவர்களின் தகுதியை உயர்த்த உதவும். உயர்கல்வியில் கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு, மாணவர்களின் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப படிப்புகளின் காலவரையறை தீர்மானிக்கப்படும்.

பலதுறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் முத்திரை பதித்தவர்கள், கல்லூரிகளில் கவுரவ பேராசிரியர்களாகப் வழிநடத்த அழைக்கப்படுவார்கள். இவை ஸ்டெம் கல்வியின் வளர்ச்சிக்காக புதிய கல்வி கொள்கையில் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களாகும்.

கட்டுரை எழுதியவர் வ.மு.முரளி

கட்டுரை மூலம் – தினமணி மாணவர் மலர் (2023)

Related Articles

Latest Posts