You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
TN ESLC EXAM 2022 | TN ESLC EXAM Time Table| எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு| செப்டம்பர் 6 முதல் விண்ணப்பிக்கலாம்
TN ESLC EXAM 2022
அக்டோபர் 2022ல் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்விற்கு 1.10.2022 அன்று 12 1 / 2 வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் 6.9.2022 முதல் 10.9.2022 வரை இந்த இணையதளத்தில்குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (nodal center) நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வு கட்டண விவரம்
விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ. 125 ஐ மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 மொத்தம் ரூ.175ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 12.9.2022 மற்றும் 13.9.2022 ஆகிய தட்கல் விண்ணப்ப கட்டண தொகை ரூ.500 கூடுதலாக செலுத்தி பதிவு செய்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை என்ன
முதன்முறையாக தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள்
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் /பதிவுத்தாள் நகல் / பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றிணை மட்டுமே இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்
ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள்
ஏற்கனவே தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் / சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் ரூ.42க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இத்தேர்விற்கான விரிவான தகவல்களை என்ற இணையதளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.