TN Education Budget 2023 | பள்ளி கல்வி மானிய கோரிக்கை ஆசிரியர்கள் அப்செட்
TN Education Budget 2023
ஆசிரியர்கள் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் பள்ளி கல்வி மானியக் கோரிக்கையில் இடம்பெறாததால் ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியுள்ளது.
குறிப்பாக மாணவர்கள் நலன் சார்ந்து அதாவது கணினி ஆய்வகம் அமைத்தல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், மாதிரி பள்ளிகள் தோற்றுவித்தல், வாசிப்பு இயக்கம், விளையாட்டு சிறப்பு பயிற்சி, தொழிற்கல்வி ஆய்வகங்கள் உள்ளிட்ட 26 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
பள்ளிகல்வி மானியக் கோரிக்கை முன்னதாகவே இருந்து, அரசு பள்ளி ஆசிரியா்கள், பகுதிநேர ஆசிரியர்கள், வேலை வாய்ப்பற்ற கணினி ஆசிரியர் சங்கத்தினர் தங்களது கோரிக்கை வலியுறுத்தி வந்தனர். ஆனால், சட்டசபையில் நடந்த மானியக் கோரிக்கையின் போது, அவர்களது கோரிக்கைகள் இடம்பெறாததால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Read Also: Anbil Mahesh Poyyamozhi Latest News
குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட வருடமாகவே வலியுறுத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையிலும், இந்த கோரிக்கை இடம்பெற்றிருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஆசிரியர்கள் நம்பிக்கையில் இருந்தனர். தற்போது வரை நிதி நிலைமை காரணம்காட்டி, தமிழக அரசு பழைய ஓய்வூதியம் செயல்படுத்துவது குறித்து அமைதியாக உள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் கனவு, பகல் கனவாகவே உள்ளது.
இதுபோன்று பகுதிநேர ஆசிரியர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தார்கள் தாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று. இந்த முறையும் பணி நிரந்தரம் அறிவிப்பு இல்லாததால், அவர்கள் கொந்தளித்துள்ளனர். பலர் கவலை அடைந்துள்ளனர். முன்னதாக பணிநிரந்தரம் கோரிக்கை வலியுறுத்தி அந்த ஆசிரியர் சங்கத்தினா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுனர். குறிப்பாக பல போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று, நேற்று சட்ட சபையில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் என்று கூறிய பள்ளி கல்வி அமைச்சர், தொடக்க முதல் உயர்நிலை பள்ளி வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது கிடப்பில் இருப்பது குறித்து அவர் பேசவில்லை. இது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. முன்னதாக வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கணினி பாடத்தை அரசு பள்ளிகளில் முழுமையாக கொண்டு வர வேண்டும் என்று பலமுறை மனுக்கள் வழங்கியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தொலைபேசி மூலமாக முதலமைச்சர் புகார் மையத்தில் இக்கோரிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று பதிவு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறாததால் ஆட்சியாளர்கள் மீது ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.