TN College reopening date 2023 | அரசு கலை கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறப்பு
TN College reopening date 2023
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 19ம் தேதி செயல்படும் என்று கல்லூரிகள் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Read Also: TNAU MSc and MTech Admission 2023
இறுதி செமஸ்டர் தேர்வை முடிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் கோடை விடுமுறை ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படுகிறது. அதன்படி 2022-2023ம் கல்வியாண்டிற்கான இறுதி செமஸ்டர் தேர்வு தற்போது கல்லூரிகளில் நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிந்ததும், கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கல்லூாி கல்வி இயக்குனர் கீதா அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் மற்றும் அரசு கலை கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 2023-2024ம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்கு பின் வருகிற ஜூன் 19ம் தேதி மீண்டும் கல்லூரி திறக்கப்படும். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ம் தேதி முதல் தொடங்கும். 2022-2024ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை அந்தந்த கல்லூரி முதல்வர்களே உறுதி செய்துகொண்டு கல்லூரி இறுதி பணி நாள் நிர்ணயித்துக்கொள்ளலாம்.