அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
34.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

TN BArch counselling latest news in Tamil | பிஆர்க் கலந்தாய்வு 800 இடங்கள் காலி

TN BArch counselling latest news in Tamil | பிஆர்க் கலந்தாய்வு 800 இடங்கள் காலி

TN BArch counselling latest news in Tamil

தமிழகத்தில் உள்ள கட்டடக்கலை பொறியியல் கல்லூரிகளில் 1,467 மாணவர்கள் சேருவதற்கு நடத்தப்பட்ட கலந்தாய்வின் முடிவில் 890 இடங்கள் நிரம்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கட்டடவியல் கல்லூாிகள் இயங்குகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பிஆர்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,467 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

Read Also: ஐஐடியில் சேர்வது எப்படி

நடப்பாண்டில் மாணவா் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க 2,485 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 1,449 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர். இவா்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிடப்பட்டது.  ஆகஸ்ட் 17, 18ம் தேதி நடந்த சிறப்பு பிரிவு கலந்தாயில் 8 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடந்த பொதுப்பிாிவு கலந்தாய்வில் 981 பேர் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்தனர். 842 பேருக்கு தற்காலிமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றை உறுதசெய்த 633 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டன.

எனினும், அதில் 577 பேர் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இதில் 24 பேர் அரசு பள்ளி மாணவர்கள். அதன்படி நடப்பாண்டு பிஆர்க் படிப்பில் 577 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், 890 இடங்கள் காலியாகவே உள்ளன.

Related Articles

Latest Posts