TN B.Ed Computer Teacher | கணினி ஆசிரியர்கள் நியமிக்க கோரி மத்திய கல்வி அமைச்சகத்திடம் மனு
TN B.Ed Computer Teacher
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்ககோாி, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் மத்திய கல்வி அமைச்சகத்திடம் ஆன்லைன் மூலமாக மனு அளித்துள்ளனர்.
Read Also: கணினி ஆசிரியர்கள் கோாிக்கை – மத்திய அரசு பதில் மனு
அந்த மனுவில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் கூறியிருப்பதாவது,
- கணினி அறிவியல் பாடத்தை தொடக்க கல்வியில் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்,
- ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக அமுல்படுத்த வேண்டும்.
- தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் கணினி ஆசிரியர்களின்றி செயல்பட்டு கொண்டிருக்கின்றன. மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப, கணினி ஆசிரியர்கள் இல்லை. மேலும் குறைந்தபட்சம் 50 கணினி ஆய்வகத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஒரு கணினி ஆசிரியர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டாயம் பணி நியமனம் செய்ய வேண்டும்.
- தற்போது, அரசுத்துறை அனைத்தும் கணினி மயமக்கப்பட்டுள்ள காரணத்தால், கணினி பயின்றவர்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.