TN B.Ed Admission 2022 latest News | மாணவர்கள் திருத்தம் செய்ய வாய்ப்பு
TN B.Ed Admission 2022 latest News
தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள முதலாம் வகுப்பில் உள்ள கல்வியியல் படிப்பு இடங்களை நிரப்ப மாணவ, மாணவிகளிடம் ஆன்லைன் வாயிலாக கடந்த 3ம் தேதி கல்லூரி கல்வி இயக்குனரகம் விண்ணப்பம் பெறப்பட்டது. பின்னர், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் அக்டோபர் 6ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் நிலை குறித்து, கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிடவில்லை.
Read Also: அரசு இலவச ஐஏஎஸ் ஐபிஎஸ் பயிற்சி
இதற்கிடையில், கல்லூரி கல்வி இயக்குனரகம் விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் மதிப்பெண்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி,
www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தாங்கள் பி.எட்.சேர்க்கை விண்ணப்பத்தில் சமர்ப்பித்த மதிப்பெண்களைப் பார்க்கலாம். இப்பொழுது திருத்தி அளிக்க விரும்பினால் மாணவர்கள் திருத்தலாம். மாணவரகளுக்குக் குறுஞ்செய்தி விரைவில் அனுப்பப்படும்.
நாளை(10.10.22) மாலை வரை இந்த வாய்ப்பு அளிக்கப்படும். 12.10.22 முதல் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பாடவாரியாக மாணவர்கள் லேடி வெலிங்டன் கல்லூரிக்கு
*நேரடியாக* கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட உள்ளனர். தற்போது மாணவர்கள் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. திருத்தங்கள் இருந்தால் செய்துகொள்ளலாம்.
கலந்தாய்வில் சேர்க்கைக் கடிதம் பெற்றவர்கள் 13.10.22 முதல் 20.10.22 வரை கல்லூரிகளில் சேர்க்கை பெற்று கல்லூரி/ விடுதி கட்டணம் செலுத்தலாம். 20.10.22 முதல் வகுப்புகள் தொடங்கும்.