அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

Free IAS IPS Coaching in Tamil Nadu | அரசு இலவச ஐஏஎஸ் ஐபிஎஸ் பயிற்சி

Free IAS IPS Coaching in Tamil Nadu | அரசு இலவச ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி

Free IAS IPS Coaching in Tamil Nadu

தமிழ்நாடு அரசு 1.10.2022 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் சென்னை, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை, ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 25.8.2023 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித்தேர்விற்கு கட்டணம் இல்லா பயிற்சியினை அளிக்க உள்ளது.

சென்னை, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டம் உள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இப்பயிற்சி மையம் 225 முழு நேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேர தேர்வர்களையும் முதல்நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது.

Read Also: டிஎன்பிஎஸ்சி கணினி வழித் தேர்வு தேதி

அதேபோன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத் தோ்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன.

2023ம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் வாயிலாக (Click Here) 7.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மையத்தில் ஏற்கனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.

மேலும் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம். தகுதியுடைய நபர்கள் 13.11.2022 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதல்நிலை தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்படும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர். 2022, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts