You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN 10th Science Practical Class 2022| பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் செய்முறை வகுப்பு

TN 10th Science Practical Class 2022

TN 10th Science Practical Class 2022 | பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் செய்முறை வகுப்பு

TN 10th Science Practical Class 2022 | அறிவியல் பாடம் செய்முறை வகுப்பு

TO JOIN IN TELEGRAM GROUP - CLICK HERE

அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்கள் 7-3-2022 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெறவுள்ள மே 2022, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள், இவ்வியக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 09.03.2022 ( புதன் கிழமை) முதல் 15.03.2022 ( செவ்வாய் கிழமை) வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உடன், மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்து விட்டு, மே 2022 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு 09.03.2022 முதல் 16.03.2022 வரை அறிவியல் பாடம் கருத்தியல் உட்பட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கும் (அனைத்து / தவறிய பாடங்கள்) அச்சேவை மையங்களின் மூலம் தனியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

ALSO READ THIS : பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்|

குறிப்பு:

1. எட்டாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்று தேர்ச்சி அல்லது இடையில் நின்ற மாணாக்கர்கள், தேர்வுத்துறையால் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு (ESLC) பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் நேரடித் தனித் தேர்வர்கள் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடம் கருத்தியல் / செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்

2. 2012-ஆம் ஆண்டிற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற மாணாக்கர்கள் அறிவியல் பாடத்தில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வெழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 09.03.2022 முதல் 15.03.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் மையம் போன்ற முழுவிவரங்களை அறிய அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.