You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
TN 10th 12th supplementary exam Timetable PDF 2022 | 10 12ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு
நடைபெற உள்ள ஜூலை, ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்தும், மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
TN 10th 12th supplementary exam Timetable PDF 2022 பள்ளி மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று ஜூன் 27ம் தேதி ஜூலை 4ம் தேதி வரையிலான நாட்களில் (ஞாயிறு நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
TN TN 10th 12th supplementary exam Timetable PDF 2022 தனித்தோ்வர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை / ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு / 12ம் வகுப்பு ஆண்டு துணைத்தேர்விற்கு புதிதாக விண்ணப்பிக்கும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தோல்வியுற்ற பாடங்களுடன், 12ம் வகுப்பு பொது தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும், ஜூன் 27ம் தேதி ஜூலை 4ம் தேதி வரையிலான நாட்களில் (ஞாயிறு நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்தாண்டுகளில் நேரடி தனித்தேர்வராக 11ம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கும், 11ம் வகுப்பு தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
READ ALSO THIS : தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை எப்படி
அரசு தேர்வு சேவை மையங்கள்
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வு கட்டணம்
1.தேர்வு கட்டணம் ரூ.125
2.ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ-50
மொத்த கட்டணம் ரூ.175
தேர்வு கட்டணம் செலுத்தும் முறை
தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 ஐ ஆன்லைன் விண்ணப்பிக்கும் பள்ளிகள், சேவை மையங்களிலேயே பணமாக மட்டும் செலுத்த வேண்டும்.
சிறப்பு அனுமதி திட்டம்
ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரையிலான நாட்களில் ஜூலை / ஆகஸ்ட் 2022 பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் ஜூலை 6ம் தேதி 7ம் தேதி வரையிலான நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்விற்கு சிறப்பு அனுமதி கட்டணம் – ரூ-500 மற்றும் 12ம் வகுப்பு தேர்விற்கு சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000
தேர்வு கூட அனுமதி சீட்டுகள் விநியோகம்
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வா்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகை சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தோ்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்கள் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. விரிவான தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் காணலாம்.
TN 10th 12th supplementary exam Timetable PDF 2022 Here
TN 10th Supplementary Exam - August 2022 - Download Here+1 Supplementary Exam August 2022 - Download Here +2 Supplementary Exam - July 2022 - Download Here
முக்கிய குறிப்பு
மே 2022 11ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவுகள் வெளியிட்ட பின்னர், ஜூலை, ஆகஸ்ட் 2022 துணைத்தேர்வு விண்ணப்பிப்பதற்கான நாட்கள் குறித்து செய்தி வெளியிடப்படும்.
பொதுவான அறிவுரைகள்
தேர்வர்கள் பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தாங்கள் பயின்ற பள்ளிகள், தனித்தேர்வு மையங்கள், சேவை மையங்களுக்கு வரும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.