தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை தேர்வுத்துறை புதிய உத்தரவு
அரசு தோ்வுகள் இயக்ககம், சென்னை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மே 2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள், தற்காலிக மதபிபெண் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு)/ மதிப்பெண் பட்டியல் (மேல்நிலை இரண்டாம் ஆண்டு) பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல்
Table of Contents
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/ மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்
24.6.2022 முற்பகல் 11 மணி முதல் மே 2022, பத்தாம் வகுப்பு / பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் 24.06.2022 முற்பகல் 11 மணி முதல் பள்ளி மாணவர்கள் /தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வு – மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை
மே 2022, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தாம் தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மே 2022 பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 22.6.2022 (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 29.06.2022 மாலை 5 மணி வரை பள்ளி மாணவா்கள் தாங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
மறுகூட்டல் கட்டணம்
பாடம் – தொகை
ஒவ்வொரு பாடத்திற்கும் – 205/-
Read Also This: TN SSLC AND HSE RESULT PDF 2022 DOWNLOAD
மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் பணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டிளை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
12ம் வகுப்பு தேர்வு – விடைத்தாள் நகல் /மறுகூட்டல் – 1, விண்ணப்பிக்கும் முறை
விடைத்தாள் நகல் / மறுகூட்டல் – I கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22.6.2022 (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 29.06.2022 (புதன்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும், தோ்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு, அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும்.
மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாளின் நகல் (copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்
- ஒவ்வொரு பாடத்திற்கும் – ரூ.275
- மறுகூட்டல் – I (Re – Totaling – I) கட்டணம்
- உயிரியில் பாடத்திறகு மட்டும் – – ரூ.305
- ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ. 205
பணம் செலுத்தும் முறை
தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் எப்படி டவுன்லோடு செய்வது எப்படி?
விடைத்தாள் நகல் விண்ணப்பிக்குபோது வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |