Temporary Teacher Job Adi Dravidar Schools | தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் விண்ணப்பம் வரவேற்பு
Temporary Teacher Job Adi Dravidar Schools
ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட ஆதிதிராவிடர் நலத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான காரணம் மாணவர்கள் கல்வி மற்றும் பொதுத் தேர்வு எழுத உள்ளதால், இந்த துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் காலியாக உள்ள 19 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்ற நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தற்காலிக ஆசிரியர் சம்பளம்
அதன்படி இடைநிைல ஆசிரியர்களுக்கு ரூ 7,500 வழங்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ 12 ஆயிரமாக ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Read Also: Temporary Teacher Job in Government Schools
தகுதிகள்
- தகுதி பெற்ற நாடுநர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட வேண்டும்
- பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்
- தகுதி வாய்ந்த பணி நாடுநர் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையென்றால், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
- முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்களுக்கும், அவ்வாறு இல்லையென்றால், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
- பணி நியமன நெறிமுறைகள் / தகுதிகள்
1.காலிப்பணியிடங்கள்
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிந தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இணைப்பில் உள்ளபடி மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
2. விளம்பரம்
அனைத்து காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட காலிப்பணியிடங்கள் விளம்புகை (பள்ளி வாரியான ஆதிதிராவிடர் மற்றும் நல பழங்குடியினர் அலுவலகம், தனிவட்டாட்சியர் (ஆதிந) அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். மற்றும் மாவட்ட அளவில் செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும்).
3. காலவரம்பு
மாவட்டங்களுக்கு இணைப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களை 20.01.2023 -க்குள் நிரப்பி அதன் விவரங்களை தவறாமல் அன்றைய தினம் மாலை 5.00 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு தவறாமல் அனுப்பிட வேண்டும்.
மேற்படி நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் பணிநியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வினத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.
4. விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்களிடமிருந்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ/எழுத்து அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்ரால் பெறும் விண்ணப்பங்களை, விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5. கல்வித்தகுதி/ வயது
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தற்போதைய நடைமுறையில் அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றபட வேண்டும்.
6. முன்னுரிமை
முன்னுரிமை ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன்னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்
அ. இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்
வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன்/ பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள்.
(இல்லையெனில்)
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET).
இடைநிலை ஆசிரியர்கள் நிமனத்தில் பட்டியலினத்தவர்க்கு முன்னுரிமையும் கடைபிடிக்க வேண்டும்.
பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள்,
பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்.