12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி? மாணவர்கள் ‘ஷாக்’ –ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்தபின், தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சில ஆசியர்கள் மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த ஆசிரியர்கள் விடைத்தாளை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
Read Also This: பொதுதேர்வு -ல் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்ப செய்தி
விடைத்தாள் நகல் கோரி, மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்கள், தங்களது விடைத்தாள் நகலில் தவறுகளை கண்டறிந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பெற்ற மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ேமலும் இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல் போன்ற முக்கியமான பாடங்களில் இந்த குளறுபடி அதிகளவில் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, ஒரு மாணவர் வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அவரது உண்மையான மதிப்பெண் 67 ஆக உள்ளது. இதேபோல் இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவருக்கு குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது அவரது உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என் 80பேர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும், மெமோ வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படலாம் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.