பொதுதேர்வு -ல் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்ப செய்தி
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
2021-2022ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பிற்கான மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு கடந்த மே 2022 மாதத்தில் நடைபெற்றது. மேற்கண்ட 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.07.2022 முதல் 8.6.2022 முடிய துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த துணைத்தோ்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயின்ற பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also This: TN 10th 12th supplementary exam Timetable PDF 2022
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது, இது ஒரு சிறப்பான முயற்சி. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுகுறித்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இதுகுறித்து தெரியப்படுத்த வேண்டும். இந்த சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம், அவர்கள் தேர்வில் வெற்றிபெற்று, இடைநிற்றலின்றி கல்வியை தொடர முடியும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |