Teacher Wage for Students' Family | ஏழைகளுக்கு ஒரு நாள் சம்பளம் சமர்ப்பணம்
Teacher Wage for Students' Family
கொரோனா வைரஸ் காரணமாக ஏழை கூலி தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் சூழல் நிலவுவதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ம்தேதி வரை மத்திய,மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ரயில்கள், பேருந்துகள் வருகின்ற 31 ம் தேதி வரை இயக்கப்படாது , திரையரங்குகள், நகைக்கடைகள், ஜவுளி கடைகள், வார சந்தை, பெரிய மால்கள், தொழில் நிறுவனங்கள் இயங்க தடை பொது இடங்ஙகளில் கூடக் கூடாது என்பன உள்ளிட்ட பல முன்னெச்சிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.
Read Also: மலைவாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்
இதனால் பெருமளவில் ஏழை கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்கள் பெரும்பாலானோர் தின கூலியாக இருக்கின்றனர் ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை அன்று கேள்விக்குறியே, பலர் அண்டை மாநிலத்திலும் மற்ற மாவட்டங்களில் தங்கி வேலை செய்பவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர் , இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதே போன்று சொந்த ஊர்களிலும் வேலை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உதவ
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
சா.அருணன்,நிறுவனத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு