தற்காலிக ஆசிரியர் காலி பணியிடம் அறிய வேண்டுமா, முதல்ல இதை படிங்க
தற்காலிக ஆசிரியர் காலி பணியிடம்
Read Also This : தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் குறித்து முழு விவரம்
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 13,331 காலிபணியிடங்கள் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் கல்வி நலன் கருதி, இந்த கல்வியாண்டில், 13,331 காலிபணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு செய்து, பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மை குழுவிற்கும் அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வியில் பணியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் அரசு பள்ளிகளில் காலிபணியிடம் எவ்வாறு அறிந்துகொள்வது, நியமனம் எவ்வாறு நடைபெறும், என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று பல கேள்விகள் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
READ ALSO THIS Teachers Vacancy List PDF (குறிப்பு இந்த காலிபணியிட விவரம் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வின்போது பள்ளி கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. ஒருவேளை இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரிபார்த்துகொள்ளவும்)
பள்ளி கல்வித்துறை மாவட்ட வாரியாக காலிபணியிடங்கள் எண்ணிக்கை மட்டுமே வழங்கியுள்ளது. ஆனால் எந்தெந்த பள்ளிகளில் காலி பணியிடம் உள்ளது என்று அறியும் வகையில் பள்ளியின் பெயர் பட்டியல் வெளியிடப்படவில்லை. மேலும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் எந்தந்த பாடங்களுக்கு காலிபணியிடம் உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் மாவட்டம் வாரியாக பள்ளி பெயர் பட்டியலுடன் கால பணியிடம் விவரங்களை வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீ்ங்கள் வசிக்கும் பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்படும். குறிப்பாக தொடக்க, நடுநிலை பள்ளிகளின் காலிபணியிடம் விவரம் அறிய அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை அணுகி விவரங்களை கேட்டு அறியலாம். அதேபோல், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடம் விவரம் அறிய மாவட்ட கல்வி அலுவலகங்களை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
காலியாக உள்ள பணியிடங்களில் பள்ளியின் தலைமை ஆசிரியர், மேலாண்மை குழுவினருடன் இணைந்து ஆசிரியர்களை தற்காலிகமாக பணி நியமனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆசிரியர் தகுதிேதர்வில் வெற்றிபெறவில்லை என்றால் பணி உண்டா இல்லை என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. அதற்கான விளக்கமும் பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும் என்று அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் ஆசிரியர் படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.