TANCET ENTRANCE EXAM 2022 | டான்செட் தேர்வுக்கு 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எம்பிஏ, எம்சிஏ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டான்செட் நுழைவுத்தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
READ ALSO THIS | Common University Entrance Test 2022 | இளங்கலை படிப்பு நுழைவுத்தேர்வு – தமிழக அரசு கண்டனம்
TANCET ENTRANCE EXAM 2022
அதன்படி 2022-23 கல்வியாண்டிற்கான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வுக்கு வருகிற 30ம் தேதி முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
டான்செட் நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.எம்சிஏ மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கு மே 14ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளுக்கு மே 15ம் தேதியும் டான்செட் நுழைவுத்தோ்வுகள் நடைபெற உள்ளது.
சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 15 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறும். டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.800 (எஸ்.சி, எஸ்.டி – ரூ.400) ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்ற 30ம் தேதி முதல் வரை அண்ணா பல்கலைக்கழக டான்செட் இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |