அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Common University Entrance Test 2022 | இளங்கலை படிப்பு நுழைவுத்தேர்வு – தமிழக அரசு கண்டனம்

Common University Entrance Test 2022 | இளங்கலை படிப்பு நுழைவுத்தேர்வு – தமிழக அரசு கண்டனம்

இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு 21.3.2022 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்கலைக்கழக நிதிநநில்கைக் குழுவின் நிதியுதவியைப் பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை 2022-23ஆம் கல்வியாண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும், பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இத்தேர்வினை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஏற்கலாம் என அறிவித்துள்ளது.

ALSO READ THIS |இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வெளிநாடு செல்வது ஏன்?

தேசிய கல்வி கொள்கையின் ஒரு அம்சமான நாடு தழுவிய ஒற்றை நுழைவுத்தோ்வு என்பது சமூக, பொருளதார, வேலைவாய்ப்பில் சமமற்ற வளர்ச்சியுள்ள நமது நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்காது. மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தின் பாட முறையிலான இத்தேர்வு, மாநில பாட முறையில் பயின்ற இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பினை வழங்காது. இதனால், தமிழக மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளவார்கள்.

Common University Entrance Test 2022
Common University Entrance Test 2022

இதுவரை நுழைவுத்தேர்வு இல்லாமல், பிளஸ்2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் அதில் சிறப்பாக பயின்று வெற்றிகரமாக பட்டம் பெற்று பயன்பெற்று வரும் நிலையில், அவர்கள் மீது நுழைவுத்தேர்வினை நுழைத்து தேவையற்ற பொருளாதார சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்றும் வகையில் அமைந்த பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது.

Common University Entrance Test 2022

ஏழை, நடுத்தர மாணவர்கள், சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் நலனை அச்சுறுத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு, நீட் தேர்வு போன்றே தவறான நடைமுறையாகும். நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் இயற்றி 12ஆம் வகுப்பு தேர்வு அடிப்படையில், மருத்துவ சேர்க்கையை நடத்த தமிழக அரசு போராடி வரும் நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கலை மற்றும் அறிவியில் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பிற்கான சோக்கைக்கும், பொது தேர்வு அறிவித்திருப்பது, இம்மாநில மாணவர் நலனுக்கு முற்றிலும் விரோதமாகும்.

ஏற்கனவே, 2006ல் திமுக ஆட்சியில் தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவு தேர்வு இருந்ததை ரத்து செய்து சட்டமியற்றியது. இந்த குடியரசு தலைவரின் ஒப்புலுடன் அந்த சட்டம்15.03.2007 நடைமுறைக்கு வந்தது. அச்சட்டத்தின்படி, மேற்கண்ட தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்பட்டார்கள்.

எனவே, திமுக அரசு எப்போதும் நுழைவு தேர்வு முறையை எதிர்த்தே வந்துள்ளது. கர்நாடக மாணவன் நவீன் மரணத்திற்கு நீட் மட்டுமே காரணமென கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் மத்திய நுழைவு தேர்வுக்கு எதிராக சமூக நீதிக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள உரிமை குரல் நாடெங்கும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதனால், டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறையும் அபாயம் உள்ளது. மேலும், ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு என்கிற முறையில் நடத்த இருக்கின்ற இத்தேர்வு பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகும்.

மேலும் பள்ளி இறுதி தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் கணக்கிலெடுத்து கொள்ளப்படாமல் பொது நுழைவு தேர்வின் மூலமே மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர முடியும் என்றால், அதனால் பயன்பெறப்போவது தனியார் பயிற்சி மையங்கள்தான். மாணவர்கள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியை எட்டிய பின்னரும், அப்பபட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கு மீண்டும் ஒரு நுழைவுத்தேர்வு அவசியம் என்பது கேலிக்கூத்தான நடவடிக்கையாகும்.

Common University Entrance Test 2022

இச்செயல் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சீராக பள்ளி கல்வியை மேற்கொள்ளும் சிறந்த கல்விச்சூழலை சீர்குலைக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுக்கும் செயலாகவே இதனை எடுத்துக்கொண்டு அதனை வன்மையாக எதிர்க்க வேண்டும்.

அரசியலைமப்பு சட்டத்தின் பொதுப்பட்டியலில் கல்வி இடம்பெற்றுள்ள நிலையில், புதிதாக கல்வி கொள்கைகளை வகுக்கும்போது அதனை நடைமுறைப்படுத்தும்போதும் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்பு இருக்க வேண்டுமேயன்றி, அவ்வாறு இல்லாமல் ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் நிலை மற்றும் நலன்களை கருத்திற்கொள்ளாமல், தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. இது மாநில அரசின் கல்விக்கான உரிமையில் தலையிடும் நடவடிக்கையாகும். எனவே, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று மீண்டு வலியுறுத்துகிறோம்.

எனவே ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமையை கடுமையாக பாதிப்பு அடையச்செய்யும் என்பதால் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பினை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Latest Posts