Tamil Talent Search Examination Date 2023 | TTSE Exam Date 2023 | தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு 2023
Tamil Talent Search Examination Date 2023
அரசு தேர்வுகள் இயக்ககுனர் சா சேதுராமா வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவா்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2023-2024 கல்வியாண்டிற்கான தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்று அனைத்து வகை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு (மெட்ரிக்/சிபிஎஸ்இ/ஐசிஎஸ்இ உட்பட) நடைபெற உள்ளது. இத்தேர்வு 1500 மாணவா்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ 1500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும். தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதம் உள்ள 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் பொதுவான போட்டியில் தெரிவு செய்யப்படுவார்கள்.
Read Also: TTSE Question Paper PDF 2022
இத்தேர்வு வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி (ஞாயிறு) நடக்கிறது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் 11ஆம் வகுப்பு மாணவர்கள்
www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை செப்டம்பர் 5ம் தேதி (இன்று) முதல் 20.9.2023 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம், முதல்வர்களிடம் தேர்வு கட்டணம் ரூ 50 சோ்த்து 20.9.2023க்குள் ஒப்படைக்க வேண்டும்.
எனவே, பள்ளி தலைமை ஆசிரியர்கள் இது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், இதனை தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.