You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு சுமாா் 79,000 பேருக்கு தற்காலிக ஆணை

Engineering College counselling news 2026,

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 2ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற 79,403 மாணவ, மாணவிகளுக்கு பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற்றது. 

Read also: பொறியியல் படிப்புகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி

முதல் சுற்றில் பொதுப்பிரிவை சேர்ந்த 26,802 மாணவ, மாணவிகளுக்கு 7.5 உள் ஒதுக்கீட்டின் கீழ் 2,177 மாணவ, மாணவிகளுக்கு என மொத்தம் 28,979 பேருக்கு பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதைதொடர்ந்து பொறியியல் 2ம் சுற்று கலந்தாய்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில் 93,117 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. 

அழைக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இதையடுத்து அவர்கள் தோ்வு செய்த விருப்பங்களின் அடிப்படையில் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

2ம் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவை சேர்ந்த 68,388 மாணவர்களும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 11,015 மாணவர்களுக்கு என மொத்தம் 79,403 மாணவ, மாணவிகளுக்கு பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இட ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக இன்று மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இறுதி இட ஒதுக்கீடு ஆணை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.