How To Calculate Cut Off Marks Engineering Course in Tamil | பொறியியல் படிப்புக்கு எப்படி கட் ஆப் மதிப்பெண் கணக்கிடுவது
How To Calculate Cut Off Marks Engineering Course in Tamil
பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ெபற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்
பொறியியல் கல்லுரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதாவது கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதுதான் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும்.இதன் அடிப்படையில்தான் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
Read Also: Blockchain Technology Course in Tamil
தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு (வொகேஷனல்) மாணவர்களைப் பொறுத்தவரை தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற் பயிற்சிப் பாடத்திற்கு (எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வைச் சேர்த்து) நூறு மதிப்பெண்களும் சேர்த்து 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு தனியே கவுன்சலிங் நடைபெறும்.
பி.ஆர்க். படிப்பைப் பொறுத்தவரை நேட்டா நுழைவுத்தேர்வில் மாணவர்கள் 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு தனியே கவுன்சலிங் நடத்தப்படும்.