ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தள்ளிவிடும் நிதிநிலை அறிக்கை - பட்டதாரி ஆசிரியர் கழகம் அப்செட்
தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்தலைவர் அ.மாயவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, நிதி நிலையில் அறிக்கையில் பள்ளி கல்வித்துறைக்கு இந்தாண்டு ரூ.36,895.95 கோடி ஒதுக்கியிருப்பது நல்ல அம்சம் என்றும், கடந்தாண்டுவிட ரூ.4,296.35 கோடி அதிகமாக ஒதுக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் கல்வியில் சேரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.ஆயிரம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும், அதே நேரத்தில் மாணவிகள் அரசு பள்ளி நோக்கி வருவதற்கும் வழிவகுக்கும் என்பதால் வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
READ ALSO THIS | ரூ. 25 லட்சம் மோசடி – ஆசிரியர் சங்க தலைவா், செயலாளர் திடீர் கைது
அதே நேரத்தில் ஆசிரியர் – அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் கழகம் அப்செட்
மேலும் அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஜீவாதாரக் கோரிக்கையான
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்துவோம் என்று வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் உறுதி அளித்து வந்தார்.
அத்தகையவர், இன்று தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும், அந்த கோரிக்கை எப்பொழுது நிறைவேற்றுவோம் என்று ஓன்றும் சொல்லாமல் இருப்பது வேதனையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த மௌனம் எங்களை மீண்டும் போராட்ட களத்திற்கு தள்ளிவிடுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது என அவர் தொிவித்துள்ளார்.
முதல்வர், இந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் தொடங்கும் இச்சமயத்திலேயே, விதி 110ஐப் பயன்படுத்தி, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கனிவுடன் வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்
. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.