Tamil Nadu Ration Card 1000 | குடும்ப அட்டை பொங்கல் பரிசு
Tamil Nadu Ration Card 1000
2023-ஆம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அனைத்து அாிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
Read Also: கிராம சபை கூட்டம் நிதி விவரம்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 2023ஆம் ஆண்டு தை பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால், 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு சுமார் 2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.
பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
