You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Grama Sabha Meeting Expense Amount|கிராம சபை கூட்டம் நிதி விவரம்

TN Grama Sabha Meeting Expense Amount

TN Grama Sabha Meeting Expense Amount | கிராம சபை கூட்டம் நிதி விவரம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை | கிராம சபை கூட்டம் நடத்துதல் | கிராம சபை கூட்டம் நடத்த நிதி எவ்வளவு வழங்கப்படுகிறது.

TN Grama Sabha Meeting Expense Amount | கிராம சபை கூட்டம் நிதி விவரம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை எண் 86 கூறுவது என்னவென்றால், கிராம சபையினை நடத்த கிராம ஊராட்சியின் அனுமதியின்படி, கிராம ஊராட்சி நிதியில் இருந்து, அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் அரசாணை நிலை எண் 65ன்படி 2022ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.

Also Read: தூய தமிழ் பற்றாளர் விருது ரூ.20 ஆயிரம் பரிசு அறிவிப்பு

Grama Sabha Meeting Expense Amount

அரசாணை எண் 160ன்படி கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான செலவினங்கள் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் அதிகபட்சமாக ரூ.1000 மட்டும் செலவினம் மேற்கொள்ள ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த தொகை போதுமானதாக இல்லை என்பதால், அதனை ரூ.5000 ஆக உயர்த்தி கிராம சபை/சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியில் மேற்கொள்ள உரிய அரசாரணை வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அரசினை கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ 5000 ஆக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. மேலும் கிராம சபை/சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியிலிருந்து மேேல ஒப்பளிக்கப்பட்ட இச்செலவினத்தை மேற்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கி ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Grama Sabha Meeting Expense Amount PDF - CLICK HERE