ஆசிரியர் கலந்தாய்வு: ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் கலந்தாய்வு:
கோவை மாவட்டம் ராஜவீதியில் உள்ள துணிவணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு செவ்வாய் கிழமையன்று நடந்து வந்தது.
அப்போது, அங்கு வந்த தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கலந்தாய்வு அறைக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் கோவை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்க கோரி, நிர்வாகிகள் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
TO READ MORE : Teachers Transfer Counselling Vacancy List PDF
நிர்வாகிகள் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் துவங்கப்பட்ட ஐஓபி தொடக்கப்பள்ளி, அதே போன்று 2018-19 கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியிலிருந்து, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால், பிரிக்கப்பட்ட காரமடை வட்டாரத்தில் உள்ள சங்கர்நகர் தொடக்கப்பள்ளி, பேரூர் ஒன்றியத்தில் உள்ள இடையர்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடம் கடந்த மூன்று ஆண்டுகளாகவே நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதுபோன்று, முத்துகல்லூர் பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
இதுதொடர்பாக வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக, முதன்மை கல்வி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும், அவர்கள் தொடக்க கல்வி இயக்கத்தில் அணுகி, பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் பெற்றுதருவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த பள்ளிகள் பெயர் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால், அங்கு தலைமை ஆசியராக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகிறோம், என்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது