Tamil Nadu Pongal Bonus Announcement | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
Tamil Nadu Pongal Bonus Announcement
அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நிதித்துறை) அவர்கள் இன்று வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது, அரசின் நலத்திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
Read Also: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
அதன்படி,
சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஒய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பாிசாக வழங்கப்படும்.
மேற்கூறிய மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
அவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.