பகுதிநேர ஆசிரியர்கள் பிப்ரவரி 24ல் போராட்டம் | Tamil Nadu Part Time Teachers Protest
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் வரும் 24ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
இதற்கான ஆயத்த பணிகள் பகுதி நேர ஆசிரியர்கள் சாா்பில் செய்யப்பட்டு வருகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
இந்த செய்தியை வீடியோவில் காண : Click Here Like and Share
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு, இசை, தையல், ஒவியம் உள்ளிட்ட பாடங்களை அரசு பள்ளி மாணவர்களை கற்றுத்தர 16,549 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.5000 நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், தமிழக அரசு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஊதிய உயர்வு முறையாக வழங்காததால், குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியாமல், பலர் பணியிலிருந்து விடுபட்டு சென்றனா். மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரி வலியுறுத்தி தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
READ ALSO: ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டம்
தொடர் போராட்டம் காரணமாக, சமீபத்தில் தமிழக அரசு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கிடையில், சட்டமன்ற தேர்தலில் திமுக அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்பின்னரும், வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மனு அளித்திருந்தினர்.
இந்த நிலையில், கோரிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தயராகி வருகின்றனர். மேலும், உடனடியாக தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |