சென்னை, ஜனவரி 25:
கடந்த 17 நாட்களாக, நடைெபற்ற வந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ள நிலையில், பகுதிநேர பெண் ஆசிரியை ஒருவர் அதன் நிர்வாகிகள் பொட்டி வாங்கினாரா? குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு, சுமார் 12 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் பகுதிேநர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள், ரூ12,500 சம்பளம் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாகவே, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்கள் அவ்வப்போது, போராட்டம் நடத்தி வருகின்றன. அதே கோரிக்கை வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதில் ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்துகொண்டார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ 15 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பன உட்பட சில அறிவிப்புகளை வெளியிட்டார். போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு நியமன தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். பின்னர், போராட்டம் தள்ளிவைப்பதாக கூட்டுக்குழு அறிவித்தது, அதேநேரம் பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என மற்றொரு கூட்டமைப்பினர் தெரிவித்த நிலையில், குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. Read also: அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றம் அளித்த முக்கிய உத்தரவுஇதற்கிடையில் பெண் ஆசிரியர் ஒருவா் தனது குரல் பதிவில், ஆசிரியர் சங்கங்கள் தேவையில்லை, கலைத்துவிடுங்கள், 15 சங்கங்கள் எதற்கு, சந்தா எதற்கு, போரட்டம் இஷ்டம்போல் நடத்துவது, ஏன் ஆசிரியர்களை அலைக்கழிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த ஆசிரியை, பேராரட்டத்திற்கு வரவில்லை என்றால், எதற்கு சபிக்க வேண்டும், இந்த அரசு நமக்கு எதும் செய்யாது எனக்கூறிய அவர், போன போராட்டத்தில் ஒருவர் சாலை விபத்தில் ஒருவர் இறந்ததாகவும், இந்த போராட்டத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் விமா்சித்துள்ளார். உங்களுக்கு பொட்டி வேணும்ன்ன வேற ஏதாவது பண்ணுங்க… எனக்கூறி விமர்சித்தது சங்கவாதிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.