பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பழைய ஓய்வூதிய திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை எண் 243 ரத்து உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கை முன் வைத்து ஆசிரியர்களுக்கு பத்தாண்டு மேலாக போராடி வரும் நிலையில், அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர மறுக்கிறது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் நிலையில், வரும் 4ம் தேதி அடுத்தக்கட்ட பேச்சு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேச்சுகள் காலம் கடத்துவதற்குதான் நடத்தப்படுகிறதே, தவிர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு சிறிதும் இல்லை. ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பது தெளிவாக தெரியும்போது, நான்கு கட்ட பேச்சு வாா்த்தை நடத்த தேவையும் இல்லை.
Read also: பள்ளி கல்வித்துறை நிரந்தர பணியிடம் அரசாணை 19 PDFதமிழக அரசு நினைத்தால் தொடக்க கல்வி ஆசிரியர்களின் 15 கோரிக்கைகளையும் 15 நிமிடங்களில் நிறைவேற்ற முடியும். ஆனால், அதற்கான மனம்தான் தமிழக அரசுக்கு இல்லை. அவர்களை போராட்டத்திற்கு தள்ளாமல், உடனடியாகன அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி உள்ளார்.