You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அகவிலைப்படி உயர்வு ஆசிரியர்கள் அப்செட் –| தமிழக அரசுக்கு எதிர்ப்பு

TN CM Latest News in Tamil

அகவிலைப்படி உயர்வு ஆசிரியர்கள் அப்செட் –| தமிழக அரசுக்கு எதிர்ப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை அவர் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறும்போது, இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.


அகவிலைப்படி உயர்வு

இதுதொடா்பாக ஆசிரியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Read Also: அகவிலைப்படி 34 சதவீதம் உயர்வு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அகவிலைப்படியினை நிலுவைத் தொகையுடன் வழங்குவதாக அறிவித்திருந்தால், ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் வரவேற்று மகிழ்ந்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், என்னதான் மத்திய அரசை விமர்சனம் செய்தாலும், ஆசிரியா்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை நிலுவைத் தொகையுடன் அவ்வப்போது வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, ஒன்றிய அரசு 1.1.2022 தேதியிட்டு வழங்கியது போல், முன் தேதியிட்டு வழங்கினால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் மாயவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு, அதே நேரத்தில் 6மாத கால நிலைவைத்தொகை அபகரிப்பு என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது பற்றி இதுநாள் வரை ஒன்றும் சொல்லாமல் மெளனம் சாதிப்பதும் சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.

அரசும் பள்ளிக்கல்வித்துறையும் செய்த அடுக்கடுக்கான தவறுகளால் சுமார்10; 12 ஆண்டுகளாக பணி வரன்முறை செய்யப்படாமலும்; இன்கிரிமெண்டுகளும் பெற முடியாமலும் தத்தளித்துக்கொண்டிருக்கும் சுமார்1500ஆசிரியர்களின் பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தமிழக அரசை சாடியுள்ளார்.

3% அகவிலைப்படி உயர்வை1-1-2022 இல் இருந்து அமல்படுத்த உரிய திருத்தத்தை உடனே மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணை வெளியிட வேண்டும் என்று அவர் தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநிலத் தலைவர் சண்முகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்த அகவிலைப்படி உயர்வை வரவேற்பதாகவும், மேலும் நிலுவையில் உள்ள ஆறு மாத காலத்திற்குண்டான அகவிலைப்படி நிலுவையினை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று நம்புகிறோம், என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அகவிலைப்படி உயர்வு ஏமாற்றம் அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின், தமிழக அரசு ஊழியர்கள், அகவிலைப்படி காலதாமதமாக வழங்கப்படுவதால் மட்டும் 120 சதவீதம் இழப்பை சந்திந்துள்ளனர் என்று அச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.