Dearness Allowance MK Stalin | அகவிலைப்படி 34 சதவீதம் உயர்வு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Dearness Allowance MK Stalin
75வது ஆண்டு சுதந்திர தினவிழா முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தேசிய கொடியை கொடியேற்றி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கிப்படும் என்பதை மகிழ்ச்சியோடு என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
