Tamil Nadu Budget 2023 | தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை ஆசிரியர்கள் அதிருப்தி, ஆதரவு
Tamil Nadu Budget 2023
தமிழக நிதிநிலை அறிக்கையில் அரசின் திட்டங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சில கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லாததால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்ககத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரடெரிக் ஏங்கில்ஸ் கூறியதாவது, அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை அமல்படுத்துவதால் 18 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 18.5 லட்சம் முதியோர்கள் இதுவரை ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், நிகழாண்டில் கூடுதலாக ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் கடந்த 3 தேர்தல்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் அதுகுறித்து நிதி நிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. முதியோருக்கு கிடைக்கும் ரூ.1000 கூட புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து இதுவரை ஓய்வு பெற்ற உயிரிழந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை என்பததை சுட்டிகாட்டுகிறோம், என்றார்.
Read Also: உாிமை மீட்பு மாநாடு
தமிழ்நாடு தேசிய, ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பா.விஜய் கூறியதாவது, ஆதிதிராவிடா், பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டு வரப்படும் என அறிவிப்பு வரவேற்கக்கூடியது. இதன்மூலம் பள்ளி கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் நலத்துறை பள்ளிகளுக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. அலகுவிட்டு அலகு பணியிட மாறுதல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஜாதி அடையாளத்தை நீக்கி, முழுமையான சமூக நீதியை ஏற்படுத்தும் வகையில் சிறந்த முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது கல்வித்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.