பட்டப்படிப்பை காலத்தை அதிகரித்து கொள்ள அல்லது குறைத்துகொள்ள, மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது.
யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் நேற்று கூறியதாவது, தற்போது பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், மாணவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு காலத்தை நிா்ணயித்து கொள்ளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதன்படி காலத்தை அதிகரித்து கொள்ளலாம் அல்லது குறைத்து கொள்ளலாம்.Read Also: தமிழ் புதல்வன் திட்டம் என்றால் என்ன?இதுபோன்ற வாய்ப்பை நம்முடைய உயர் கல்வி நிறுவனங்களிலும் வழங்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டம் யுஜசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் இது குறித்து கருத்துகளை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பட்டப்படிப்பு காலத்தை அதிகரித்து கொள்வது அல்லது குறைத்து கொள்வதற்கு ஏற்ப, மாணவர்களுக்கு கிெரடிட் எனப்படும், மதிப்பெண் குறியீடுகளும் மாறும், இவ்வாறு அவர் கூறினார்.