சிவகங்கை மாவட்டம் பொய்யாவயல் கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சக்தி என்ற மாணவன் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவன் நேற்று பள்ளியில் சக மாணவர்களிடம் நேற்று வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், ஏற்கனவே வகுப்பறை சிதிலமடைந்த நிலையில், வகுப்பறையில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவன் சுவிட்ச் தொட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் தாக்கி அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Read also: school students helpline number இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷன், ஆசிாியர் பாண்டிமுருகன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவனின் உறவினர்கள் கூறும்போது, விபத்து நடந்தபோது, அருகில் இருந்த மற்றொரு ஆசிரியர் பாஸ்கரன் மீது நடவடிக்ைக எடுக்கவில்லை. மேலும், கல்வி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளனர்.