Read Also: கலை திருவிழா கடுப்பாகும் ஆசிரியர்கள்
இதனை தொடர்ந்து, தற்போது மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 11.11.2022 நாளிட்ட செயல்முறைகளின்படி மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 03.01.2023 முதல் 09.01.2023க்குள் நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்தப்பட உள்ளது. எனவே மாவட்ட அளவில் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.