You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Social Service Award in Tamil | Environment Protection Award in Tamil | சமூக சேவை விருது |சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது

Typing exam apply Tamil 2023

Social Service Award in Tamil | Environment Protection Award in Tamil | சமூக சேவை விருது |சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது

Social Service Award in Tamil

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர்கள், நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவும் இத்துறையில் மற்றவர்களை ஊக்குவிப்புதற்காகவும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை வரலாற்றில் இவ்வகையான விருது வழங்குவதே இதுவே முதன்முறையாகும். இந்த விருதுகள் வழங்குவதன் மூலமாகர் தேசத்தில் நேர்மறையான எண்ணங்களை தட்டியெழுப்பவும் அவற்றை பயன்படுத்த முடியும். செப்டம்பர் 24, 2022 முதல் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சேவைகளை ஆற்றியுள்ள தகுதியுள்ள நிறுவனங்கள் மற்றும் நபர்களிடம் இருந்து பாிந்துரைகள் அழைக்கிறது. இவ்விரு விருதுகளும் சான்றிதழுடன் தலா ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

Read Also: சமூக நீதி நாள் எப்போது தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது.

வரப்பெறும் பரிந்துரைகள் அனைத்தும் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளை தலைவராக கொண்ட அந்தந்த துறைகள் சார்ந்த அறிஞர்கள் உள்ளடக்கிய இரண்டு தோ்வு குழுக்களுக்கு அனுப்பப்படும்.

பரிந்துரைகள் அனுப்ப வேண்டிய முகவரி

  • ஆளுநரின், துணை செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர்,
  • ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை 600022
  • விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதிநாள் 30.10.2022 மாலை 5 மணி. விருதுகள் ஜனவரி 26, 2023 அன்று ஆளுநர் அவர்களால் வழங்கப்படும்.
மேற்கண்ட விருதுகளுக்கு தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது நபர்களை பரிந்துரைக்கலாம். பாிந்துரைக்கப்படும் நபர், மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள் அல்லது ஓய்வு பெற்ற அரசு செயலாளா்கள், இணை செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்மஸ்ரீ விருது பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு அந்தந்த துறையில் பணியாற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் இந்த என்ற awardsrajbhavantamilnadu@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு பரிந்துரைக்கபட்ட வடிவத்தில் அனுப்ப வேண்டும்.