You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Social Justice Day on September 17 | சமூக நீதி நாள் | சமூக நீதி நாள் உறுதிமொழி

Typing exam apply Tamil 2023

Social Justice Day on September 17 | சமூக நீதி நாள் | சமூக நீதி நாள் அரசாணை | சமூக நீதி நாள் உறுதிமொழி

Social Justice Day on September 17

தந்தை பெரியார் தினமான செப்டம்பர் 17ம் தேதி நாளை ஆண்டுத்தோறும் சமூக நீதி நாளான ஆக அனுசரித்து உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Also Read: கிராம சபை கூட்டம் நிதி விவரம்

சமூக நீதி நாள்

அதன்படி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 590 – ல் கூறியிருப்பதாவது,‘ தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110இன் கீழ் முதல்வர் அவர்கள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச்சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்தநாள் தினமான செப்டம்பர் 17ம் தேதி ஆண்டும் தோறும் சமூக நீதி நாள் ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவுத்துள்ளது என்று சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரசாணையில் சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாம கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித்தள்ளி பெண்கள் சமநிலையில் மதித்து, அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக தனது கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி அன்று ஆண்டுத்தோறும் சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுத்தோறும் செப்டம்பர் 17ம் தேதி நாள் அன்று தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழியை அனுசரிக்க முடிவு செய்து ஆணையிடுகிறது.

சமூக நீதி நாள் உறுதிமொழி

பிறப்பொக்கும் எல்லா உயரிக்கும் என்ற அன்பு நெறியையும் –

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்

எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.

//////

சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப்

பார்வையும் கொண்டவையாக என்னுடைய

செயல்பாடுகள் அமையும்

/////

சமத்தும், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துகொள்வேன்

மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்

//////

சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி நாள் அரசாணை - Click Here