SNMV College Latest News | சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்வு
SNMV College Latest News
(Asteroid Search Campaign) ஆய்விற்கு எஸ்என்எம்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பு (INTERNATIONAL ASTRONOMICAL SEARCH COLLABORATION-IASC) புதிய விண்கற்களைக் கண்டறியும்(Asteroid Search Campaign) ஆய்வினை நடத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் வழியாகச் சர்வதேச அளவில் விண்கற்களைக் கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்துவதை IASC செய்து வருகிறது. இவ்விண்கற்கள் கண்டறிதல் குறித்த ஆய்வுத்திட்டம் அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் (NASA) உதவியோடு CITIZEN SCIENTIST RESEARCH திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் அமெரிக்க நாட்டின் Institute for Astronomy என்று நிறுவனம் பான்-ஸ்டார்ஸ்-01 என்ற தொலைநோக்கியின் மூலம் ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் வானில் படங்களை எடுத்துவருகிறது.
Read Also: எஸ்என்எம்வி கல்லூரியில் டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ் கருத்தரங்கம்
இப்படி எடுக்கப்படும் படங்களை கொண்டு ஒரு பிரத்யேக மென்பொருள் உதவியுடன் விண்கற்களை கண்டறிவது இவ்வாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் பணியாகும். இவ்வாய்வில் கோவை எஸ்.என்.எம்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் எம். சிவரஞ்சனி அவர்களின் வழிகாட்டுதல்படி, கலீலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் அவர்களின் தலைமையிலான குழுவில் என். சாஜிதா, எஸ். தாரணி, எஸ். பவதாரணி,எஸ். காவ்யா, ஆர். திருநாவுக்கரசு, கே. எப். வேலண்டினா ஆகிய மாணவ மாணவிகள் ஆய்வில் பங்கேற்று புதிய விண்கற்களை கண்டறிந்தனர்.
புதிய விண்கற்களை கண்டறிந்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் போ.சுப்பிரமணி அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்வில் இயற்பியல் துறைத் தலைவர் க. லெனின்பாரதி , உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் T. புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.