SNMV College | எஸ்என்எம்வி கல்லூரியில் டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ் கருத்தரங்கம்
SNMV College
எஸ்என்எம்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிஅறிவியல் துறை சார்பில் "டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ்" எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் இன்று நடந்தது.
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் போ. சுப்பிரமணி தலைமை வகித்தார். கணினிஅறிவியல் துறைத் தலைவர் கே.தமிழ்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
Read Also: SNMV College Asteroid Search
Skyappz software நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி பிரியங்கா மற்றும் நிறுவன மேலாளர் கண்ணன் ஆகியோர் "டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.
தனது சிறப்புரையில் "கரோனா காலகட்டத்தில் பல்வேறு துறைகளும் டிஜிட்டலை நோக்கி முழுமையாக நகர்ந்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின. அது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வீட்டிலிருந்து பணிபுரிதல், ஆன்லைன் கல்வி தொடங்கி சிறிய கடைகள் கூட ஆன்லைன் வர்த்தகத்தில் நுழைந்தது வரையில் இந்தக் கரோனா காலகட்டத்தில் டிஜிட்டலை நோக்கிய நகர்வு தீவிரமடைந்திருக்கிறது. இதனால், கணினிதுறை சார்ந்த மனிதவள மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. தற்போது, கிட்டத்தட்ட 400 சதவீதம் அளவில் கணினித்துறை ஊழியர்களுக்கு தேவை அதிகரித்து இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது புதிதாக கல்லூரி முடித்துவரும் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவ மாணவிகள் தங்கள் துறை சார்ந்த அறிவை தினம் தினம் வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.