You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

SMC Resolution in Grama Sabha Meeting | எஸ்எம்சி தீர்மானம் கிராம சபை கூட்டம் வழிகாட்டு நெறிமுறைகள்

SMC Meeting on October 2022

SMC Resolution in Grama Sabha Meeting | எஸ்எம்சி தீர்மானம் கிராம சபை கூட்டம் வழிகாட்டு நெறிமுறைகள்  

SMC Resolution in Grama Sabha Meeting

பள்ளி மேலாண்மை தொடர்பான அனைத்து கட்டுரைகள் படிக்க - இங்கே கிளிக் செய்க

மாநில திட்ட இயக்குனர் சுதன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி மேலாண்மை குழு கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக்குழுவில் பள்ளி வளர்ச்சிக்கான தீா்மானங்களை நிறைவேற்றுதன் மூலம் பள்ளி வளர்ச்சிக்கு கிராம பஞ்சாயத்துகளின் பங்களிப்பை முழுமையாக பயன்படுத்த முடியும். எனவே கிராம சபை கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல், உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடர்பான பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பகிிர்ந்துகொள்வது அவசியம்.

வழிகாட்டு நெறிமுறைகள்

அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் , உறுப்பினர் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பான எடுக்கப்பட்ட தீா்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும்.

Also Read: TN Grama Sabha Meeting Expense Amount|கிராம சபை கூட்டம் நிதி விவரம்

பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்களை தொகுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

என்னென்ன சமர்பிக்க வேண்டும்

கீழ்கண்ட கருத்துருக்கள் தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபை கூட்டத்தில் ஆலோசனைக்காக சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  • இடைநிற்றல்
  • மாணவர் சேர்க்கை
  • பள்ளி உட்கட்டமைப்பு
  • மாணவர் பாதுகாப்பு
அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இத்தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு அதுதொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

தீர்மானங்களை பகிர்வது மூலம் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்னை மற்றும் தேவைகளை அறிந்துகொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். மேலும் கிராம பஞ்சாயத்துகள் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட முடியும்.

கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீா்மானங்களை முடிவுகளை இம்மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.