SMC Meeting on October 2022 | பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு
SMC Meeting on October 2022
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த மாதம் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மாநில உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபை நடைபெறும் பஞ்சாயத்துடன் தொடர்புடைய பள்ளிகளில் மட்டும் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்துகொண்டு, ஆலோசித்து பள்ளி வளர்ச்சி தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
Read Also: ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்த கோரிக்கை
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் வருகை பதிவு
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் வருகைப்பதிவினை தலைவர் மட்டுமே பெற்றோர் செயலியில் கூட்டம் நடைபெறும்போது பதிவு செய்தல் வேண்டும். தலைவர் தங்களது கைப்பேசி அல்லது பிற உறுப்பினர்களின் கைப்பேசி மூலமாக வருகைப்பதிவினை பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி மேம்பாட்டு திட்டம்
பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கவும், அதை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் இதற்கென பள்ளி மேலாண்மை குழு தொகுதியை பெற்றோர் செயலியில் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை பயிற்சியின் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இச்செயலின் வாயிலாக திட்டமிடுதல் மேற்கொள்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இல்லம் தேடி கல்வி
இல்லம் தேடி தன்னார்வலர்கள் கடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் அவர்கள் சார்ந்த மையத்தில் பயிலும் மாணவர்களின் கற்றல் குறித்த ஆலோசனைகள் சார்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை கலந்தாலோசனை செய்யப்படுதல் வேண்டும்.
Read More Details SPD Proceeding - Download Here