School Reopen Guidelines in Tamil Nadu 2021 | பள்ளி திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள்
பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை
பள்ளி கல்வித்துறை 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்து நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளி கல்வித்துறை மூலம் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் தற்போது வரை உள்ளன. இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதுதொடா்பாக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். முதல்வர் ஆணைக்கு ஏற்ப 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி துவங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Also Read: பள்ளி திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை திடீர் சுற்றறிக்கை
வழிகாட்டு நெறிமுறையில் என்னென்ன திட்டங்கள் ?
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிப்பு பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 50 சதவீதம் மாணவர்கள் மட்டும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருவது, ஒற்றைப்படை, இரட்டைப்படை என பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வகுப்பு இடைவேளையின் போது அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் குவிந்துவிடாத வகையில் இடைவேளையின் நேரமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் இருக்கைகள் இடைவெளியுடன் அமைக்கப்பட உள்ளது. மாணவர்கள் ஒன்றாக அமா்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பள்ளிக்கு வரும் மாணவா்களை தொ்மல் கருவி மூலம் சோதிக்கப்படுவர். மாணவர்கள் முக கவசம், கையுறை அணிந்து பள்ளிக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி திறப்பதையொட்டி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கல்வித்துறை சார்பில் அறிவுறுத்துப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முதல்கட்டமாக உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு, உடற்பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் பாடப்பகுதிகள் குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பள்ளிகளில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் விவரத்துடன் பதாகைகள் பள்ளியில் பொருத்தப்பட உள்ளன. மேலும் கொரோனா பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளன. இன்னும் பல கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளுக்கு விரைவில் அனுப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.