கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. குறிப்பாக, தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக, பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டன் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு மற்றும் 10, 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பொது தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு முடியும் வரை எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்க கூடாது, அதாவது, அனைவரும் தேர்ச்சியுற வேண்டும், எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடக்க கல்வி இயக்குனர் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். மேலும், தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கையில், கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையி் உள்ளது. எனவே, தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும். மேலும், மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் இதர திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். சுற்றறிக்கை இணைப்பு: