You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

School Petrol Bunk Case in Tamil பள்ளி அருகே பெட்ரோல் பங்க் செயல்படலாமா?

Typing exam apply Tamil 2023

School Petrol Bunk Case in Tamil பள்ளி அருகே பெட்ரோல் பங்க் செயல்படலாமா?

பள்ளிகளில் இருந்து 30மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் செயல்படலாம் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, கணியம்பூண்டி கிராமத்தில் மருத்துவமனை பள்ளி, குடியிருப்புகளுக்கு மிக அருகில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பது, அப்பகுதி மக்களுக்கு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, பள்ளி, மருந்துவமனைக்கு அருகில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்க தடை விதிக்க கோரி, திருப்பூரை சேர்ந்த ரேவதி என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Read Also : பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு விதி அறிவோம்

பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு கணியம்பூண்டி கிராமத்தில், பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க, ஸ்ரீ விஷ்வா ஏஜென்சிக்கு, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளனர். முறையான பொது விசாரணை நடத்தாமல், மருத்துவமனை, பள்ளியில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், பெட்ரோல் விற்பனை நிலையம் பற்றிய, எந்த விபரங்களையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை. மருத்துவமனை, பள்ளியில் இருந்து 30மீட்டர் தொலைவில், பெட்ரோல் விற்பனை நிலையம் இருந்தால், கூடுதல் நிபந்தனைகளுடன், இந்த ஒரு நிலையத்தை நிறுவ அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(தினமலர் செய்தி 21.8.2022)