You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு உற்சாகமாக பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள்

Job at PM SHRI Kendriya Vidyalaya School

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு உற்சாகமாக பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள்

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கியுள்ளது.

பள்ளிப் பருவம் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத காலமாகும். அதிலும் வகுப்புக்கு செல்லும் போது கிடைக்கும் புதிய புத்தகத்தின் வாசனை புதிய சீருடை, புதிய பயனர் அனைத்துமே மாணவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். உலகம் முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா காரணமாக இந்த அனுபவங்களை மாணவர்கள் கடந்த இரு ஆண்டுகளாக இழந்துவிட்டனர்.

Read Also This: இடைநிலை ஆசிரியர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஜூன் மாதம் பள்ளிகள் அதாவது, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களை வரவேற்க பள்ளிகள் தயாராக உள்ளன. வகுப்பறைகள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மாணவிகள் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றுள்ளனர்.

அரசு பள்ளிகளில் முதல் நாளான இன்று மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கையும் என்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் ஒரு கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கும் என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர் நிருபர்களிம் கூறியதாவது, பள்ளிகளை பொறுத்தவரை ஏற்கனவே முகக் கவசங்கள் அணிந்து கொண்டு வருவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என்கிற எல்லா விதிமுறைகளும் இன்னமும் அப்படியே நடைமுறையில் இருக்கிறது. இதுவரை பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை எந்த விதிமுறையும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இவ்வாறு, அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், அதற்கான மாதிரி பாட பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் பள்ளி அமைவிடம் போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.  இவை தவிர பேரவையில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.