இடைநிலை ஆசிரியர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்
இரண்டு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
Read Also This : அரசு பள்ளிகளுக்கு ஆபத்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
இதில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த உண்ணாவிரத பேராட்டத்தில் பங்கேற்றனர். இதில் மாவட்ட தலைவர் என் விநாயகன் தலைைம தாங்கினார். மாவட்ட செயலாளர் சி.அரசு சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ராஜபாண்டியன் நன்றி கூறினார்.
இந்த போராட்டத்தில், கோவை மாவட்டத்தில் நடந்துமுடிந்த ஆசிரியர் பொதுமாறுதலில் மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று மாதம் ஊதிய வழங்கப்படாமல் இருப்பதாகவும், உடனடியாக அவர்களுக்கு வழங்கப்படும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அவர்களுக்கான மாத ஊதியம் பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் எதிர்காலத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உடல்நல குறைவினால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும் குறைந்த அளவு காப்பீட்டு தொகை வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். உடடினயாக அரசு இதனை சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டம் தொடர்ந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |