School Education Minister Latest Video | பள்ளி கல்வி அமைச்சர் அவசர செய்தி
School Education Minister Latest Video
பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி சற்று முன் ஒரு காணொளி மூலம் ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
Read Also: அன்பில் மகேஷ் பேட்டி
அந்த காணொளியில் அவர் பேசியதாவது,
அனைவருக்கும் வணக்கம், தலைமையாசிரியராகிய உங்களாலும் பணிபுரியும் ஆசிரியர்களால்தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்து சென்று விட்டனர். இன்றைக்கு மாணவர்கள் நாளை சென்று விடுவர். ஆனால் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். எனவே பள்ளியின் தொடக்க முதல் அதன் வளர்ச்சி வரை பார்த்தவராக நீங்கள் இருக்கக்கூடும். மாணவர்களுக்கு பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், பள்ளி மீது ஓர் இனம் புரியாய் பிணைப்பை ஒவ்வொரு மாணவரும் வைத்திருப்பதை அறிந்தவர் நீங்கள். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி ஆண்டு முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு இருக்கும் பள்ளி மீதான பிணைப்பு பள்ளியிலும் வகுப்பிலும் உடன்படித்த நண்பர்கள் மீதான அன்பு ஆசிரியர்கள் மீதான மரியாதை பள்ளியின் வளர்ச்சியில் இருக்கக்கூடிய அக்கறை என ஒவ்வொன்றையும் அறிந்தவர் நீங்கள் தான்.
To see in Video - Click Here
ஆகவே உங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைப்பது உங்களால் மட்டுமே சாத்தியம். சில மாணவர்கள் உள்ளூரில் இருக்கலாம், சிலர் பெரு நகரங்களில் பணியாற்றலாம், வேறு சிலர் வெளிநாடுகளில் இருக்கலாம். உலகின் எந்த மூலையில் மாணவர்கள் இருந்தாலும் உங்களால் அவர்களை ஒன்றிணைக்க முடியும். ஏற்கனவே முன்னாள் மாணவர்களை இணைத்துக் கொண்டு பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் நடந்திருக்கின்றனவா, இருக்கிறது எனில் உங்கள் அனுபவங்களை பள்ளிக்கல்வித்துறையோடு பகிர்ந்து கொள்ளுங்கள் முன்னாள் மாணவர்களை கொண்டு இதுவரை உங்கள் பள்ளிக்கு ஏதேனும் இதுவரை செய்யவில்லை, எனில் இனி அவர்களோடு இணைந்து பள்ளியின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பத்தோடு இருக்கிறீர்களா, இதுவரை முன்னாள் மாணவர்களோடு இணைந்து செயல்பட்டிருந்தாலும் இனி செயல்பட விருந்தாலும் கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்து ( https://forms.gle/YM86p1paLEde2NN58 ) அதில் உங்களைப் பற்றியும் பள்ளியை பற்றியும் ஆன விவரங்களை தாருங்கள் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.