You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Anbil Mahesh Latest News | அன்பில் மகேஷ் பேட்டி

Anbil Mahesh Latest press meet

Anbil Mahesh Latest News | அன்பில் மகேஷ் பேட்டி

Anbil Mahesh Latest News

அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறார் திரைப்படத் திருவிழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் புதன்கிழமை தொடங்கியது. இதனை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறார் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த படங்கள் தொடர்பாக விமர்சனக் கட்டுரை எழுதுதல், ஒரு காட்சியை நாடகமாக நடித்தல், சுவரொட்டி வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டன.

அதிலிருந்து 152 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சிறார் திரைப்பட திருவிழா சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. வரும் மார்ச் 17ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் மாணவர்களுக்கு படங்கள் திரையிடுதல், குறும்பட பயிற்சி, பிரபர இயக்குனர்களுடன் கலந்துரையாடல், கதை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பர்.

Read Also: ஊட்டி உருது பள்ளியில் பயங்கர சம்பவம் - மாணவிகள் மயக்கம்

அதில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும் நுழைவுத்தேர்வு என்பது அரசு பள்ளிகளில் இருக்காது. எட்டாம் வகுப்பு வரை குழந்தைகளின் கற்றல் குறித்த ஆய்வு மேற்கொள்ளவே கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

சிறார் திரைப்படத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.