பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் கைது
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லையில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (42) கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று அந்த மாணவி ஆய்வகத்தில் இருக்கும்போது உள்ளே வந்த சரவணகுமார், திடீரென பாலியல் ரீதியாக மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி வீடு திரும்பியதும் நடந்தது குறித்து தனது தயாரிடம் கூறியுள்ளார்.
Read Also: வினாத்தாள் விவகாரம் ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
இதுகுறித்து, மாணவியின் குடும்பத்தினர் ஒமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.