You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Question Paper Issue at Dindigul| வினாத்தாள் விவகாரம் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் 

Typing exam apply Tamil 2023

Question Paper Issue at Dindigul | வினாத்தாள் விவகாரம் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் 

Question Paper Issue at Dindigul

தமிழகத்தில் காலாண்டு தேர்வு வினாத்தாள், அந்தந்த மாவட்டங்களில் தயார் செய்யப்பட்டு, தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 5ம் வகுப்பு வரை நீங்கலாக பிற வகுப்புகளுக்கு மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு காலாண்டு தேர்வு நடந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கான வினாத்தாள்களை வட்டார கல்வி அலுவலர் பழனிராஜ் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு மொபைல் கடையில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி கொடுத்துள்ளார்.

Read Also: இளநிலை உதவியாளர் பணிமாறுதல் விலக்கு – தலைமை ஆசிரியர் சங்கம்

இவர் கும்பரையூர் நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் நெடுஞ்செழியனிடம் வினாத்தாளை எடுத்துச்சென்று சம்மந்தப்பட்ட பள்ளிகளிக்கு விநியோகிக்கமாறு கூறியுள்ளார். வத்தலக்குண்டு கடையிலிருந்து வினாத்தாள்களை பெற்ற ஆசிரியர் நெடுஞ்செழியன், அதில் சில பள்ளிகளுக்கான வினாத்தாளை இல்லாததால், அவற்றை மீண்டும் அதே கடையில் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பள்ளி வினாத்தாள்களை, தனியார் கடையில் அலட்சியமாக விட்டு சென்றத தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் அடிப்படையில், பாச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுசீந்திரன், மன்னவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சேது முருகன், கள்ளக்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குன்வர் ஜோஸ்வா வளவன், கும்பரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் குன்வர் ஜோஸ்வா வளவன், ஆசிரியர்கள் சுசீந்திரன், சேதுமுருகன்  அகிய மூவரையும் பணயிடை நீக்கம் செய்து வத்தலக்குண்டு கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News Source (Tamil Murasu on 2.10.2022)